search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூறைக் காற்றில் சேதம் அடைந்த வாழைகள்.
    X
    சூறைக் காற்றில் சேதம் அடைந்த வாழைகள்.

    தாளவாடி அருகே சூறை காற்றுடன் மழை- 30 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதம்

    தாளவாடி அருகே நேற்று சூறை காற்றுடன் மழை பெய்தது. இதில் 30 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதமாகின. பலரது வீட்டின் மேற்கூரை காற்றில் பறந்தது.
    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி  சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. காலை முதல்  வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் 4 மணியளவில், சாரல் மழையாக ஆரம்பித்து பின் சூறைகாற்றுடன் மழை பெய்தது. தாளவாடி இக்களூர், தொட்டகாஜனூர், சூசைபுரம், கரளவாடி, திகனாரை, ஜோரைகாடு  ஆகிய பகுதியில்  சுமார் 20 நிமிடம் மிதமான மழை பெய்தது.

    தாளவாடி அடுத்த திகனாரை அருகே உள்ள ஜோரைகாடு கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் 3 ஏக்கர் தோட்டத்தில் நேந்திரம் வாழை பயிர் செய்துள்ளார். சூறைகாற்றுக்கு தாக்கு பிடிக்கமுடியாமல் 3 ஆயிரம் வாழை மரம் முறிந்து சேதம் ஆனாது. அதே போல் விவசாயி தாமோதரன் தோட்டத்தில் 8 ஆயிரம் வாழையும், மகேஷ் தோட்டத்தில் 2 ஆயிரம் வாழையும், துரைசாமி தோட்டத்தில் 2 ஆயிரம் வாழையும், நாகநாயக்கர் தோட்டத்தில் 2 ஆயிரம் வாழையும், தேவராஜ் தோட்டத்தில் ஆயிரம் வாழையும், குருசாமி தோட்டத்தில் ஆயிரம் வாழையும், சிதம்பரம் தோட்டத்தில் 500  வாழையும், சன்முகவேல் தோட்டத்தில் ஆயிரம் வாழைகள் என பல்வேறு விவசாயிகளின் 30 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதம் ஆனது.

    இன்னும் ஒரு மாதத்தில் அறுவடைக்கு தயர் நிலையில் இருந்த சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள வாழைகள் சேதாரம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். அதே போல் பலரது வீட்டின் மேற்கூரை காற்றில் பறந்தது. மேலும் மின் கம்பமும் முறிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. 
    Next Story
    ×