search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேஎஸ் அழகிரி
    X
    கேஎஸ் அழகிரி

    ரேபிட் டெஸ்ட் சோதனையை நிறுத்தி வைக்க வேண்டும்- கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ரேபிட் டெஸ்ட் சோதனையை நிறுத்தி வைக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவில் கொரோனா தொற்று கடுமையாக பாதிக்கப்பட்டதும் அதை பரிசோதனை செய்வதற்கு உரிய கருவிகளும், ஆய்வகங்களும் இல்லாத நிலை ஏற்பட்டது.

    நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத்துறைக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.8 சதவீதம் மட்டுமே மத்திய பா.ஜனதா அரசு நிதி ஒதுக்கியதால் பெருகிவரும் மக்கள் எண்ணிக்கையை ஈடுகட்டுகிற வகையில் மருத்துவர்களையோ, கட்டமைப்பு வசதிகளையோ பெருக்கிக்கொள்ள முடிய வில்லை. கொரோனா தொற்று நோயை துல்லியமாக சோதனைசெய்து கண்டறிய போதிய பி.சி.ஆர். ஆய்வகங்கள் இல்லாத நிலையில் பெருகி வரும் நோயாளிகளை பரிசோதிக்க முடிய வில்லை.

    உலக நாடுகளிலேயே மிக குறைவான எண்ணிக்கையில் சோதனை செய்யும் நாடாக இந்தியா இருந்தது. இந்நிலையில் துரித பரிசோதனை கருவி மூலம் அரைமணி நேரத்தில் கொரோனா தொற்றை எதிர்கொள்ளக்கூடிய எதிர்ப்பு சக்தி உடலில் உள்ளதா என்பதை முதலில் கண்டறிந்துவிட்டு பிறகு பி.சி.ஆர். சோதனை செய்யலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவெடுத்தது.

    அதன் ஒப்புதலின் பேரில் அரைமணி நேரத்தில் சோதனை செய்யக்கூடிய 7 லட்சம் துரித சோதனை கருவிகள் சீனாவில் உள்ள தனியார் நிறுவனத்திடமிருந்து இந்திய அரசு கொள்முதல் செய்தது. அதே போல தமிழக அரசும் 4 லட்சம் கருவிகளுக்கு கொள்முதல் ஒப்பந்தம் போட்டு 24 ஆயிரம் கருவிகளை முதல் தவணையாக பெற்றுள்ளது. மத்திய அரசு மூலமாக 12 ஆயிரம் கருவிகள் தமிழகத்திற்கு கிடைத்தன.

    கொரோனா நோயாளிகளை தரம் குறைந்த துல்லியமாக சோதிக்க முடியாத துரித சோதனை கருவிகளை பயன்படுத்துவது குறித்து உரிய ஆலோசனைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மத்திய, மாநில அரசுகளுக்கு வழங்கவேண்டும்.

    இந்த உபகரணங்கள் மூலம் நோயாளிகளை துல்லியமாக சோதனை செய்யமுடியுமா என்பதை ஆய்வு செய்ய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கொண்ட குழுவை அமைத்து ஆய்வு செய்யவேண்டும்.

    அத்தகைய ஆய்வுகளின் முடிவுகள் வரும் வரை ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலமாக நோயாளிகளை பரிசோதிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×