என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழிலாளர்கள்  முற்றுகை
    X
    தொழிலாளர்கள் முற்றுகை

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர்கள் தங்குமிடம் உணவு கேட்டு முற்றுகை

    வெளிமாநில தொழிலாளர்கள் தங்குமிடம் உணவு கேட்டு வேலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    வேலூர்:

    வேலூரில் சிகிச்சைக்காக வந்த வெளிமாநிலத்தவர்கள் சுமார் 250க்கும் மேற்பட்டோர் லாட்ஜிகளில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்படுகிறது. சிகிச்சை முடிந்தவர்கள் தங்களை ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை வேலூர் நகரப்பகுதிகளில் பலூன், பொம்மை, ஐஸ்கிரீம் வியாபாரம் செய்து வரும் வெளிமாநில தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.

    அவர்கள் கூறுகையில்:- தற்போது ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் தவிக்கிறோம். மேலும் வாடகை செலுத்த பணம் இல்லாததால் தங்குமிடம் இல்லை. சாப்பாட்டுக்கு மிகவும் கஷ்டப்படுகிறோம்.

    எனவே தங்குமிடம், உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். வடமாநில வாலிபர்கள் சமூக இடைவெளி இல்லாமல் மொத்தமாக திரண்டு வந்து கலெக்டர் அலுவலகம் அருகே சாலையில் நின்றனர். அவர்களை கண்ட பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
    Next Story
    ×