என் மலர்

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பாபநாசம் சிறையில் இருந்து தப்பி ஓடிய குற்றவாளிகள் 2 பேர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாபநாசம் சிறையில் இருந்து தப்பி ஓடிய 2 பேரை போலீசார் கைது செய்து புதுக்கோட்டை கிளைசிறையில் அடைத்தனர்.

    பாபநாசம்:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள பட்டவர்த்தி கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன் (வயது 22). ஆடுதுறை கலைஞர் நகரை சேர்ந்தவர் கண்ணன் (45). இவர்கள் 2 பேர் மீதும் அய்யம்பேட்டை, கபிஸ்தலம் ஆகிய இடங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன. இவர்களை கடந்த மாதம் 22-ந் தேதி கபிஸ்தலம் போலீசார் கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அப்போது மாஜிஸ்திரேட் சிவகுமார், 2 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    அதன்படி 2 பேரும் பாபநாசத்தில் உள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணி அளவில் வீரப்பன், கண்ணன் ஆகிய இருவருக்கும் சிறை காவலர்கள் உணவு கொடுக்க சென்றனர். அப்போது அவர்கள் இருவரையும் காணவில்லை. இருவரும் சிறையில் இருந்து தப்பி ஓடியது தெரியவந்தது.

    இதுதொடர்பாக பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய இருவரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். அதேபோல் பாபநாசம் சிறைகாவலர்கள் கணேசமூர்த்தி, ராஜமாணிக்கம், முகமது பைசல் ஆகியோர் நேற்று இரவு விடிய விடிய தேடினர் அப்போது ஆடுதுறை கலைஞர் நகர் ஆற்றுப்படுகையில் மறைந்திருந்த இருவரையும் கைது செய்து பாபநாசம் துணைபோலீஸ் சூப்பிரண்டு நந்தகோபாலிடம் ஒப்படைத்தனர். 

    இது குறித்து பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் துர்கா வழக்குப்பதிவு செய்து பாபநாசம் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி இருவரையும் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் புதுக்கோட்டை கிளைசிறையில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×