என் மலர்
செய்திகள்

அமைச்சர் செங்கோட்டையன்
தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை- அமைச்சர் செங்கோட்டையன்
தனியார் பள்ளிகளில் ஊரடங்கின் போது மாணவர்களின் கல்வி கட்டணம் கட்டாய வசூல் செய்யப்படுவது குறித்து கவனத்திற்கு கொண்டு வந்தால் அரசு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
கோபி:
கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ஊரடங்கு உத்தரவு வருவதற்கு முன்பே அடுத்த கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் 90 சதவிகிதம் தயார் நிலையில் உள்ளது.
தனியார் பள்ளிகளில் ஊரடங்கின் போது மாணவர்களின் கல்வி கட்டணம் கட்டாய வசூல் செய்யப்படுவது குறித்து கவனத்திற்கு கொண்டு வந்தால் அரசு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளும்..
தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவிற்கே முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது.
முதல்வரின் அறிவுரைப்படி 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நடமாடும் காய்கறி வாகனசந்தை அமைக்கப்பட்டுள்ளது.
பெல் நிறுவனத்தின் உதவியுடன் புதிய ராட்சத எந்திரம் மூலம் கிருமி நாசினியை புகையாக தெளிக்கும் பணி தமிழகத்தில் முதல்முறையாக ஈரோடு மற்றும் கோபி பகுதியில் செயல்படுத்தப்படஉள்ளது.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு தேவையான பொருட்கள் கிடைக்கவும் அடிப்படை வசதிகள் கிடைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளின் நகைக்கடன் கட்டாய வசூல் குறித்து புகார் வந்தால் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story