என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    சென்னிமலை அருகே கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி டெய்லர் பலி

    சென்னிமலை அருகே கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி டெய்லர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    தர்மபுரி மாவட்டம் இண்தூர், மோகனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (வயது 23). இவர் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே கவுண்டம்பாளையம் நால்ரோடு பகுதியில் தங்கி தனியார் பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று மாலை விஜய் தனது உறவினர் ஒருவருடன் சென்னிமலை அடுத்த அய்யம்பாளையம் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு குளிக்க வந்தனர். இதில் விஜய் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. தற்போது கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தண்ணீர் அதிகமாக சென்றது. விஜய் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

    இது குறித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விஜய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னிமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சென்னிமலை இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    Next Story
    ×