என் மலர்
செய்திகள்

தற்கொலை
ஆலங்குடி அருகே பெண் போலீசின் கணவர் தற்கொலை
ஆலங்குடி அருகே பெண் போலீசின் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டையை சேர்ந்தவர் பழனிகுமார் (வயது 32). சம்பவத்தன்று இவர் வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இந்தநிலையில் சம்பட்டி விடுதி சாலை மாங்கோட்டை விளக்குரோடு அருகேயுள்ள இரட்டை போஸ்ட் தரிசு நிலத்தில் பழனிகுமார் இறந்து கிடந்தார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் சம்பட்டிவிடுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பழனிகுமார் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனிகுமாரின் மனைவி செந்தமிழ்செல்வி போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
Next Story






