என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடு புகுந்து கொள்ளை
    X
    வீடு புகுந்து கொள்ளை

    ஒடுகத்தூர் அருகே வீடு புகுந்து கொள்ளை

    ஒடுக்கத்தூர் அருகே செல்போன் மோகத்தால் திருடனாக மாறிய கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டார்.

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை அடுத்த ஓட்டேரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது42). ஆடு மேய்க்கும் தொழிலாளி.

    இவர் கடந்த மாதம் ஒடுகத்தூர் சந்தையில் ஆடுகளை விற்று ரூ.70 ஆயிரத்தை வீட்டில் வைத்திருந்தார்.

    அன்றிரவு சீனிவாசனின் வீட்டில் முகமூடி அணிந்த 6 பேர் கும்பல் புகுந்தது. அந்த கும்பல் சீனிவாசன் அவரதுமனைவி கலா ஆகியோரை கத்தியை காட்டி மிரட்டி, தாக்கி ரூ.70 ஆயிரம் மற்றும் கலா அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    இதுகுறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின்பேரில் வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

    இந்த நிலையில் அரிமலை கூட்ரோட்டில் வேப்பங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பத்மநாபன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அநதவழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் ஒடுகத்தூரை அடுத்த கல்லுட்டை கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் (19), ராமநாயணகுப்பத்தை சேர்ந்த தாமு (21) என்பது தெரிய வந்தது. ராஜேஷ் குடியாத்தம் அரசு கல்லூரியில் படித்து வருகிறார்.

    மேலும் இவர்கள் ஓட்டேரி பாளையத்தில் சீனிவாசன் வீட்டிற்குள் புகுந்து, அவரை மிரட்டி நகை, பணத்தை கொள்ளையடித்ததும் தெரியவந்தது. அவர்கள் ஓட்டிவந்த பைக்கும் திருடப்பட்டதுதான்.

    அதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மோட்டார் சைக்கிள் மற்றும் அவர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

    கல்லூரி மாணவர் ராஜேசுக்கு செல்போன் மீது அதிக ஆர்வம் இருந்தது. விலை உயர்ந்த செல்போன் மற்றும் பைக் வாங்கி உல்லாச வாழ்க்கை வாழ ஆசைப்பட்டார்.

    சீனிவாசன் வீட்டில் பணம் இருப்பதை தெரிந்து நண்பர்களுடன் வீடு புகுந்து திருடியுள்ளார். செல்போன் மோகத்தால் மாணவர் திருடனாக மாறிவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×