என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
ரஜினிகாந்த் - ஹஜ் கமிட்டி தலைவர்
குடியுரிமை திருத்த சட்டத்தால் ஏற்படும் பாதிப்பு- ரஜினியிடம் விளக்கிய ஹஜ் கமிட்டி தலைவர்
By
மாலை மலர்29 Feb 2020 8:07 AM GMT (Updated: 29 Feb 2020 8:07 AM GMT)

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து எங்களது கருத்துக்களை நடிகர் ரஜினிகாந்துடன் பகிர்ந்துகொண்டதாக அகில இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் அபுபக்கர் கூறினார்.
சென்னை:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சி.ஏ.ஏ.) எதிராக இஸ்லாமிய அமைப்புகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
கடந்த 5-ந்தேதி செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் சிஏஏ சட்டத்தால் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எந்தவித பாதிப்பும் வராது அப்படி ஒருவேளை பிரச்சினை வந்தால் நான் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்று கூறினார்.

இது குறித்து இஸ்லாமிய அமைப்புகள் தங்களது அதிருப்தியை வெளியிட்டனர். ரஜினிகாந்த் இந்த சட்டத்தின் தீவிரம் குறித்து அறியாமல் பேசுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இஸ்லாமிய அமைப்பின் பிரதிநிதிகளுடன் ரஜினிகாந்த் போனில் பேசியதாகவும், நேரில் சந்தித்து சிஏஏ சட்டம் குறித்து ஆலோசிக்க தயார் என்று கூறியதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை அகில இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் அபுபக்கர் இன்று சந்தித்து பேசினார்.
அப்போது குடியுரிமை திருத்த சட்டத்தால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு இருப்பதை அவர் ரஜினியிடம் விளக்கியுள்ளார்.
பின்னர் அபுபக்கர் நிருபர்களிடம் கூறும்போது,
“டெல்லி கலவரத்திற்கு எதிராக குரல் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தேன். குடியுரிமை திருத்த சட்டம் குறித்து எங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம்” என்றார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சி.ஏ.ஏ.) எதிராக இஸ்லாமிய அமைப்புகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
கடந்த 5-ந்தேதி செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் சிஏஏ சட்டத்தால் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எந்தவித பாதிப்பும் வராது அப்படி ஒருவேளை பிரச்சினை வந்தால் நான் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்று கூறினார்.

இஸ்லாமிய அமைப்பின் பிரதிநிதிகளுடன் ரஜினிகாந்த் போனில் பேசியதாகவும், நேரில் சந்தித்து சிஏஏ சட்டம் குறித்து ஆலோசிக்க தயார் என்று கூறியதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை அகில இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் அபுபக்கர் இன்று சந்தித்து பேசினார்.
அப்போது குடியுரிமை திருத்த சட்டத்தால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு இருப்பதை அவர் ரஜினியிடம் விளக்கியுள்ளார்.
பின்னர் அபுபக்கர் நிருபர்களிடம் கூறும்போது,
“டெல்லி கலவரத்திற்கு எதிராக குரல் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தேன். குடியுரிமை திருத்த சட்டம் குறித்து எங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம்” என்றார்.
Next Story
×