search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனது பெற்றோரின் 80-வது சதாபிஷேக விழாவை திருக்கடையூர் கோவிலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நடத்தி வைத்தார்.
    X
    தனது பெற்றோரின் 80-வது சதாபிஷேக விழாவை திருக்கடையூர் கோவிலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நடத்தி வைத்தார்.

    ராஜராஜ சோழனாகவே முதல்வர் எடப்பாடி செயல்படுகிறார்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி சோழ மண்டலத்தை பாதுகாக்க ராஜராஜ சோழனாகவே மாறி செயல்படுகிறார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உள்ள அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு இன்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, தனது தந்தையின் சதாபிஷேக திருமணவிழாவையொட்டி வருகை தந்தார்.

    அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-

    ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட விவசாய வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்துள்ளார்.

    இதை சட்டசபையில் வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் விவசாயிகளை பாதுகாப்பது குறித்தும், டெல்டா மாவட்டங்களை பாதுகாப்பது குறித்தும் முடிவு எடுத்து அறிவிக்கப்படும்.

    மீத்தேன், ஷேல் கியாஸ் உள்ளிட்ட கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு திமுக ஆட்சிக் காலத்தில் மு.க.ஸ்டாலின் தான் கையெழுத்திட்டு அனுமதி கொடுத்தார். அதன் விளைவு டெல்டா மாவட்டங்களில் விவசாயம், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதை தடை செய்யத்தான் இந்த அறிவிப்பை முதல்வர் அறிவித்துள்ளார். இதனை விவசாயிகள் உள்பட அனைவரும், உலகில் உள்ள 8 கோடி தமிழர்களும் வரவேற்றுள்ளனர்.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    மேலும் உடனடியாக டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஷேல் கியாஸ் உள்ளிட்ட பணிகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்க முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். முற்றிலுமாக தமிழகத்தில் கார்ப்பரேட் கம்பெனிகளின் எண்ணெய் தூரப்பன பணிகள் தடை செய்யப்படும்.

    முதல்வரின் இந்த அறிவிப்பால் மு.க.ஸ்டாலின் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார். அவர் பெரிய நடிகர். மக்களை ஏமாற்ற மு.க.ஸ்டாலின் நடித்து வருகிறார்.

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி சோழ மண்டலத்தை பாதுகாக்க ராஜராஜ சோழனாகவே மாறி செயல்படுகிறார்.

    வருகிற ஏப்ரல் மாதம் உள்ளாட்சி தேர்தல் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் எங்களிடம் தெரிவித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×