search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீ விபத்து
    X
    தீ விபத்து

    சென்னிமலை அருகே நார் மில்லில் தீ விபத்து

    சென்னிமலை அருகே நார் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே நார் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. அறச்சலூரில் சேர்ந்த கண்ணன் என்பவர் சென்னிமலை அருகே கரட்டுப்பாளையத்தில் நார் மில் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

    இங்கு கயிறு தயாரிப்பதற்காக மிஷின் மூலம் நார் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் 12 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். வழக்கம்போல் நேற்று தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். அப்போது மாலை 5 மணியளவில் திடீரென எந்திரத்தில் தீப்பொறி பறந்து தீ விபத்து ஏற்பட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.பின்னர் சென்னிமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். நிலைய அதிகாரி துரை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த தீவிபத்தில் நார் மற்றும் எந்திரங்கள் தீயில் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×