search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    வேன் மோதி பேராசிரியை பலி: சிகிச்சை பலனின்றி கணவரும் உயிரிழப்பு

    மொபட் மீது வேன் மோதிய விபத்தில் பேராசிரியை பலியானார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கணவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

    சித்தோடு:

    பவானி லட்சுமி நகர் அருகே உள்ள வாசவி கல்லூரி கோவை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் உதவி பேராசிரியை இறந்தார். மேலும் சிகிச்சை பலனின்றி கணவர் நேற்று இறந்தார்.

    நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் கே.ஒ.என். தியேட்டர் பகுதியை சேர்ந் தவர் மெய்யரசு (வயது 29). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் பவானி, ஒரிச்சேரி பகுதியை சேர்ந்த தேவராஜ் மகள் சங்கீதா (26)வுக்கும் திருமணம் நடந்தது.

    இவர் வெள்ளாளர் பார்மசி கல்லூரியல் உதவி பேராசிரியையாக பணி புரிந்தார். இருவருக்கும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி காலை குமாரபாளையத்தில் இருந்து ஈரோடு செல்ல மெய்யரசு ஓட்டிச் சென்ற மொபட்டில் பின்னால் அமர்ந்து சங்கீதாவும் சென்று கொண்டு இருந்தார். சேலம்-கோவை நெடுஞ்சாலை பவானி, லட்சுமி நகர், வாசவி கல்லூரி அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக கோழி லோடு ஏற்றிக் கொண்டு வந்த ஈச்சர் வேன் மோதி மொபட் மீது மோதியது.

    இதில் நிலை தடுமாறி விழுந்த சங்கீதா தலையில் பலத்த அடிப்பட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயத்துடன் மீட்கப்பட்ட மெய்யரசு ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இச்சம்பவம் தொடர்பாக சித்தோடு போலீஸ் இன்ஸ் பெக்டர் கதிர்வேல் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    திருமணமாகி ஒரே மாதத்தில் கணவன் மனைவி என இருவரும் விபத்தில் பலியான சம்பவம் 2 குடும்பத்தாரையும் மிகுந்த சோகத்தில் மூழ்கடித்து உள்ளது.

    Next Story
    ×