என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சேவல்களை மோத விட்டு சூதாட்டம் - 4 பேர் கைது

    அந்தியூரில் 2 சேவல்களை மோத விட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் ஈசப்பாறை லைன் மாரியம்மன் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு ஜெயிக்குது... தோக்குது என்ற சத்தம் கேட்டது. போலீசார் அங்கு சென்று பார்த்தபோது 4 பேர் சூழ்ந்து 2 சேவல்களை மோதவிட்டு சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்தனர்.

    உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். குமார் (44), சந்திரமோகன் (38), பழனிசாமி (55), கோபால்சாமி (31) ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அவர்களிடம் இருந்து சேவல்களும், பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×