என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    சீர்காழி அருகே ஆற்றில் வேன் கவிழ்ந்து விபத்து - 12 பக்தர்கள் காயம்

    சீர்காழி அருகே இன்று காலை ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் 12 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழி:

    சென்னை மணலியில் இருந்து ஒரு சுற்றுலா வேன் சீர்காழி நோக்கி புறப்பட்டது. இதில் முருக பக்தர்கள் இருந்தனர். அந்த வேன் இன்று காலை சீர்காழி அருகே கோவில்பத்து நான்கு பிரிவு புறவழிச்சாலையில் வந்தபோது திடீரென கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. சிறிது நேரத்தில் சாலையோர கழுமலை ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் முருக பக்தர்கள் 12 பேர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் . அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் செல்வதால் வேனை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×