search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்கு எந்திரங்கள்
    X
    வாக்கு எந்திரங்கள்

    உள்ளாட்சி தேர்தல் - ஓட்டு சாவடிக்கு தேவையான பொருட்கள் பிரிப்பு

    கோவையிலிருந்து ஊட்டி ஒன்றிய அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட, ‘பேலட் சீட்’, ஓட்டு பெட்டி உள்ளிட்ட தேர்தல் பொருட்கள் இன்று முதல் ஓட்டு சாவடி வாரியாக பிரிக்கப்படுகிறது.
    ஊட்டி:

    நீலகிரியில் ஊரக உள்ளாட்சி தேர்தல், 27, 30-ந்தேதிகளில் நடக்கிறது. போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களை தவிர, 404 பதவிகளுக்கு, 1,479 பேர் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டதால், கிராம புறங்களில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. கோவையிலிருந்து ஊட்டி ஒன்றிய அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட, ‘பேலட் சீட்’, ஓட்டுபெட்டி உள்ளிட்ட தேர்தல் பொருட்கள் இன்று முதல் ஓட்டுசாவடி வாரியாக பிரிக்கப்படுகிறது.

    தொடர்ந்து, 395 ஓட்டுசாவடிகளுக்கு மண்டல தேர்தல் அலுவலர் மூலம், 26-ந்தேதி அனுப்பி வைக்கப்பட உள்ளது. தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ‘ஊராட்சி தலைவர் வேட்பாளருக்கு ரோஸ், வார்டு உறுப்பினருக்கு வெள்ளை, ஒரே ஓட்டு சாவடியில் இரு வார்டு உறுப்பினர் இருந்தால், வெள்ளை மற்றும் வெளிர் நீலம், மாவட்ட ஊராட்சி கவுன்சிலருக்கு மஞ்சள், ஒன்றிய கவுன்சிலருக்கு பச்சை என, நான்கு நிறங்களில் ஓட்டு சீட்டுகள் வழங்கப்படும்.

    கட்சி சார்பற்ற தேர்தலான ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிக்கு வேட்பாளர் பெயர், ஓட்டு சீட்டில் இடம் பெறாது. வேட்பாளர் பட்டியல், அகர வரிசையில் தயாரிக்கப்பட்டாலும், சின்னத்தின் வரிசை அடிப்படையில், ஓட்டு சீட்டு உள்ளது. வேட்பாளருக்கான சின்னத்தை தேர்வு செய்து ‘பேலட் சீட்’டில் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும்,’ என்றனர். ஓட்டு எண்ணும் மையம் அந்தந்த ஒன்றியங்களில் இடம் தேர்வு செய்யப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×