என் மலர்
செய்திகள்

தற்கொலை
அன்னவாசல் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
அன்னவாசல் அருகே கருத்துவேறுபாடு காரணமாக வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அன்னவாசல்:
அன்னவாசல் அருகே உள்ள குருக்கப்பட்டியை சேர்ந்தவர் அடைக்கலம் (வயது 32). இவருக்கும் திருமயம் அருகே உள்ள அம்மாப்பட்டியை சேர்ந்த கருப்பையா மகள் முத்துலட்சுமிக்கும் (வயது 19) கடந்த 9 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவருக்கும் திருமணம் ஆனதில் இருந்து கருத்துவேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் முத்துலட்சுமி தனது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து அடைக்கலம் வெளிநாடு சென்றுவிட்டார்.
பின்னர் வெளிநாட்டில் இருந்து வந்த அடைக்கலம் மீண்டும் முத்துலட்சுமியை வீட்டிற்கு அழைக்க சென்றபோது அவர் வரமறுத்துள்ளார். இதனால் மனமுடைந்து வீடு திரும்பிய அடைக்கலம் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அன்னவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அடைக்கலத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story