search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீமான்
    X
    சீமான்

    கார் தருவதாக சொன்னால் ஓட்டு போடுவார்கள்- இலவச அறிவிப்புகளை விளாசிய சீமான்

    இலவசமாக கார் தருவதாக சொன்னால் மக்கள் ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்து விடுவார்கள் என இன்றைய அரசியல் நிலை குறித்து சீமான் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
    மதுரை:

    மதுரையில் நடந்த மாவீரர் நினைவு நாள் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-

    சீமான் சினிமாவில் இருந்துதான் வந்தார் என்பார்கள். நான் கமல் ஹாசன், விஜயகாந்த், ரஜினிகாந்த், விஜய் போன்று ரசிகர்களை சந்திக்கவில்லை. நான் மக்களை சந்திக்கிறேன். நீங்கள் எங்களை ஆள வேண்டும் என்று நினைக்கிறீர்கள், நாங்கள் எல்லோரையும் போல எங்கள் மக்கள் வாழ வேண்டும் என நினைக்கிறோம். இரண்டுக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. 

    நாம் தமிழர் கட்சியை விட்டால் தமிழகத்துக்கு நாதி கிடையாது. ஏனெனில் எங்களைவிட இந்த மண்ணின் மக்களை நேசிப்பவர்கள் உலகத்திலேயே கிடையாது.

    ஏதாவது செய்து மேலே வந்துவிடுங்கள் நண்பர்கள் என்னிடம் கூறுகின்றனர். அதனால் வரும் தேர்தலில் வீட்டுக்கு வீடு இலவசமாக ஒரு கார் கொடுப்பதாக அறிக்கை வெளியிடவுள்ளோம். சீமான் கார் தருகிறார் என்று அனைவரும் எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்து விடுவார்கள். நான் முதலமைச்சர் ஆனபிறகு கார் வரப்போகிறது என காத்திருப்பார்கள்.

    அப்போது கார் கொடுக்கும் திட்டம் அறிவித்து, ஒவ்வொரு வீடாகச் சென்று இதுதான் கார் என்று ‘அம்பேத்கார்’ படத்தை கொடுப்போம். ‘இவர்தான் உலகத்திலேயே பெரிய கார், அண்ணல் அம்பேத்கார், இவர் படத்தை மாட்டுங்கள்’ என்று சொல்வோம். 

    நான் இப்படி சொன்னதால் கார் தரமாட்டார், அம்பேத்கார் படத்தைத் தான் தருவார்கள் என்று நினைக்கலாம். அதன்பிறகு வேறு ஒரு திட்டத்தை போடுவேன். 

    அவர்கள் எப்படியாவது மக்களை ஏமாற்றவேண்டும் என்று நினைக்கிறார்கள், நாங்கள் எப்படியாவது மக்களை மாற்ற வேண்டும் என நினைக்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார். 
    Next Story
    ×