என் மலர்

  செய்திகள்

  சுவேதா
  X
  சுவேதா

  ஓசூர் அருகே ரெயில் முன் பாய்ந்த பெண் மரணம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஓசூர் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் ரெயில் முன் பாய்ந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 10 மாத பெண் குழந்தை உயிர் தப்பியது.

  ஓசூர்:

  மயிலாடுதுறையில் இருந்து மைசூருவுக்கு திருச்சி, சேலம், ஓசூர், பெங்களூரு வழியாக அதிவிரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

  இன்று காலை 4 மணிக்கு அந்த ரெயில் ஓசூர் ரெயில் நிலையத்தை தாண்டியபோது பாலம் அருகே 25 வயது மதிக்கத்தக்க பெண் திடீரென்று ரெயில் முன் பாய்ந்தார். அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் கையில் வைத்து இருந்த 10 மாத பெண் குழந்தை உயிர் தப்பியது.

  ரெயில் வேகமாக சென்றதில் தண்டவாளத்தில் இருந்த கற்கள் சிதறி குழந்தையின் நெற்றியில் பட்டதால் அந்த குழந்தைக்கு காயம் ஏற்பட்டது.

  இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஓசூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணின் உடலை கைப்பற்றினர். காயம் அடைந்த குழந்தையை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து உள்ளனர். அங்கு குழந்தைக்கு நெற்றியில் கட்டுப்போட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட பெண் ஓசூரை அடுத்த மூக்காண்டப்பள்ளியை சேர்ந்த சுவேதா (25) என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. உயிர் தப்பிய 10 மாத பெண் குழந்தையின் பெயர் சுருதி லட்சுமி ஆகும்.

  நேற்று இரவு குழந்தையுடன் சுவேதா வீட்டில் இருந்தபோது அவருக்கும், அவரது கணவர் முரளிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. குழந்தைக்கு மருந்து கொடுப்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி தகராறில் முடிந்தது. இதனால் குழந்தையுடன் வீட்டைவிட்டு வெளியேறிய சுவேதா இன்று காலை மன உளைச்சலில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

  உயிர் தப்பிய 10 மாத பெண் குழந்தை.

  அவர் குழந்தையை எடுத்துக்கொண்டு வரும்போது நாம் இறந்தாலும் பரவாயில்லை என்று மனம் மாறி குழந்தையை பாலம் அருகே கீழே வைத்துவிட்டு ரெயில் முன் பாய்ந்து உள்ளதும் தெரியவந்து உள்ளது.

  ரெயில் வேகமாக சென்ற நேரத்தில் கற்கள் சிதறி குழந்தையின் நெற்றியில் பட்டதால் காயம் ஏற்பட்டு உள்ளது. ஆனால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும், குழந்தை நன்றாக உள்ளது என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

  Next Story
  ×