என் மலர்

  செய்திகள்

  மரணம்
  X
  மரணம்

  நாங்குநேரி அருகே ஓடையில் மூழ்கி கொத்தனார் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாங்குநேரி அருகே ஓடையில் மூழ்கி கொத்தனார் பலியான சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

  நெல்லை:

  நாங்குநேரி அருகே உள்ள பட்டர்புரம் கோனார் தெருவை சேர்ந்தவர் வேம்பு. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்தமகன் ஆழ்வார்(வயது 24) கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். ஆழ்வாருக்கு திருமணம் ஆகவில்லை.

  ஆழ்வார் நேற்று மாலை தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள ஒரு ஓடைக்கு குளிக்க சென்றுள்ளார். குளித்து கொண்டிருக்கும்போது அவர்களிடையே அங்குள்ள பாலத்தின் உட்பகுதியில் மூழ்கி சென்று அடுத்த பக்கமாக வெளியே வரவேண்டும் என்று போட்டி எழுந்துள்ளது.

  உடனே ஆழ்வாரும் பாலத்திற்கு கீழ்பகுதியில் மூழ்கி சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பாலத்தின் அடியில் அவர்கள் அனைவரும் மூழ்கி பார்த்துள்ளனர். அப்போது அங்கு ஆழ்வார் பாறைகளுக்கு இடையே மாட்டி கொண்டிருப்பதை பார்த்து அவரை உடனடியாக நண்பர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர். பின்னர் நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு ஆழ்வாரை சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

  ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×