என் மலர்

  செய்திகள்

  இளம்பெண் மாயம்
  X
  இளம்பெண் மாயம்

  கோவையில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவையில் 2 குழந்தைகளுடன் மாயமான இளம்பெண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
  கோவை:

  கோவை புலியகுளம் ஈஸ்வரன் செட்டியார் லே-அவுட்டை சேர்ந்தவர் சரவணன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி காளீஸ்வரி (வயது 25). இவர்களுக்கு 8 வயதில் நவீன்குமார் என்ற மகனும், 5 வயதில் சஞ்சனா என்ற மகளும் உள்ளனர்.

  கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு ஏற்பட்டது. இதில் காளீஸ்வரி மிகுந்த மனவேதனை அடைந்தார்.

  கடந்த 4 நாட்களுக்கு முன்பு சரவணன் வெளியூருக்கு சென்று இருந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த காளீஸ்வரி தனது 2 குழந்தைகளுடன் மாயமாகி விட்டார். வீட்டுக்கு திரும்பிய சரவணன் மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை. பின்னர் இதுகுறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார்.

  போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 குழந்தைகளுடன் மாயமான காளீஸ்வரியை போலீசார் தேடி வருகிறார்கள்.


  Next Story
  ×