என் மலர்

  செய்திகள்

  அமைச்சர் செல்லூர் ராஜூ
  X
  அமைச்சர் செல்லூர் ராஜூ

  வெங்காயத்தை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை - அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வியாபாரிகள் வெங்காயத்தை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  சென்னை:

  கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர்களுக்கான ஆய்வுக்கூட்டம் இன்று நடந்தது.

  இதில் முதன்மை செயலாளர் தயானந்த் கட்டார்யா, பதிவாளர் கோவிந்தராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

  பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கடந்த 20-ந்தேதி வரை 50, 027 மெட்ரிக் டன் காய்கறிகள் ரூ.146.60 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தற்போது வெளிச்சந்தையில் வெங்காயம் விலை உயர்வை கருத்தில் கொண்டு ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 36,110 கிலோ வெங்காயம் ரூ.14.16 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

  வெங்காயத்தின் விளைச்சல் குறைந்து வரத்து குறைவாக இருப்பதே விலை உயர்வுக்கு காரணம். கர்நாடக மாநிலத்தில் நேற்று மார்க்கெட் விடுமுறை என்பதால் 70 லாரிகளில் வந்த வெங்காயம் இன்று 50 ஆக குறைந்துள்ளது.

  வெங்காயம்

  வெளிமார்க்கெட்டில் ரூ. 90 வரை வெங்காயம் விற்கப்படுகிறது. மத்திய அரசு வெளிநாட்டில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்கிறது.

  வெங்காயத்தை குறைந்த விலைக்கு வாங்கி பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் கூட்டுறவு கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. துறை ரீதியாக ஆய்வு நடத்தி அதன் மூலம் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

  வெங்காயத்தை அதிக நாட்கள் பதுக்கி வைக்க முடியாது. அழுகுவதோடு அதன் ஈரத்தன்மை குறைந்து எடை குறையும். அதனால் பதுக்கி வைக்க வாய்ப்பு இல்லை.

  வெளிமாநிலத்தில் இருந்து கிலோ ரூ. 50-க்கு வாங்கி ரூ. 40-க்கு விற்கிறோம். விலைவாசியை கட்டுப்படுத்துவதில் அரசு தீவிரமாக உள்ளது.

  மொத்த வியாபாரிகள் 50 டன்னுக்கு மேல் வாங்கக்கூடாது என கூறியுள்ளோம். வெங்காயத்தை வியாபாரிகள் பதுக்கி இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். வழக்கமாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெங்காய விலை உயரும். ஜனவரியில் குறைந்து விடும்.

  ஆடிட்டர் குருமூர்த்தி சுயவிளம்பரம் தேடுவதற்காக தேவையற்ற கருத்துக்களை கூறியுள்ளார். இதனால் ஒன்றும் நடக்கப்போவதில்லை. ரஜினி சொன்ன அற்புதம் 2021-ல் நடக்கும். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்பது தான் அந்த அதிசயம்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×