என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  மாங்காடு அருகே வீட்டில் பதுக்கிய 2 டன் குட்கா பறிமுதல்- 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாங்காடு அருகே வீட்டில் பதுக்கிய 2 டன் குட்கா பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பூந்தமல்லி:

  குன்றத்தூர் நான்குரோடு அருகே சுந்தர்(45) என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் குட்கா விற்பனை செய்வதாக குன்றத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் சோதனை செய்தபோது கடையில் குட்காவை பதுக்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

  அதில் மாங்காடு அடுத்த சின்னபனிச்சேரியை சேர்ந்த கருப்பசாமி என்பவரிடமிருந்து குட்காவை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்து வருவதாக தெரிவித்தார்.

  இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கருப்புசாமி பொருட்கள் வைத்திருந்த ஒரு வீட்டை சோதனை செய்தனர். அதில் 2 டன் எடை கொண்ட குட்கா இருப்பது தெரியவந்தது.

  இதையடுத்து மாங்காடு போலீசார் 2 டன் குட்காவை பறிமுதல் செய்து குட்கா விற்பனை செய்த சுந்தர் (45), கருப்பசாமி(40), ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்கள் வேறு எங்கெல்லாம் குட்காவை பதுக்கி வைத்துள்ளனர். இவர்களுக்கு வேறு எங்கெல்லாம் குட்கா வியாபாரிகளுடன் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×