என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    சத்தியமங்கலம் அருகே கோவில் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

    சத்தியமங்கலம் அருகே கோவில் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்த துண்டன் சாலை பகுதியில் குற்றாலத்து மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்குள் நேற்று இரவு மர்ம நபர்கள் புகுந்து பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் அணிந்திருந்த கால் பவுன் பொட்டு தாலி, மற்றும் கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

    இன்று காலை கோவில் பூசாரி பூஜைக்காக வந்தார். அப்போது கோவிலின் பூட்டு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடு போனது தெரியவந்தது.

    இது குறித்து பவானிசாகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    கொள்ளை நடந்த கோவில் அருகே வீடு வணிக நிறுவனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    Next Story
    ×