search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் பிடிக்கப்படும் - போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

    ராணிப்பேட்டை சிப்காட் வாலாஜா நகரங்களில் சுற்றிதிரியும் கால்நடைகள் பிடிக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    வாலாஜா:

    ராணிப்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தை வேலூர் மாவட்ட எஸ்.பி.பிரவேஷ்குமார் நேற்று ஆண்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் காவல் நிலையத்தில் உள்ள கோப்புகளை ஆய்வு செய்தார்.

    இதனை தொடர்ந்து எஸ்.பி.பிரவேஷ்குமார் கூறியதாவது:-

    போலீஸ் நிலையங்களில் போலீசார் பற்றாக்குறையை தடுக்க வேலூர் திருவண்ணாமலை மாவட்டங்களில் அடுத்த ஆண்டு 5,000 போலீசார் நியமிக்கப்படுவார்கள். ராணிப்பேட்டையில் காலை மாலை வேளைகளில் அதிகமாக உள்ள போக்குவரத்தை தடுக்க கூடுதல் போலீசார் நியமிக்கப்படுவார்கள்.

    அரசு வேலை வாங்கி தருவதாக அப்பாவி மக்களிடம் பணம் வாங்கியதாக 3 புகார்கள் வந்துள்ளன. அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அரசு வேலை வாங்கி தருகிறேன் என கூறுபவர்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம். ராணிப்பேட்டையில் காட்டன் சூதாட்டம், 3 சீட் ஆட்டம் ஆடுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.   

    வாலாஜாவில் கால்நடைகளை கடத்தியதோடு கொலை செய்த கும்பலை விரைவில் பிடித்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ராணிப்பேட்டையில் வாராந்திர வெள்ளிக்கிழமை சந்தையில் பொதுமக்களிடம் குறிப்பாக பெண்களிடம் நகை பறிப்பு, செல்போன் திருடு, பொதுமக்களின் வாகன திருட்டுக்குற்றங்கள் நடப்பதாக தெரியவந்தது அதனை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

    நில ஆக்கிரமிப்பு மோசடிகள் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  

    பெல் குடியிருப்புகளில் திருட்டு குற்றங்கள் நடத்திய பவாரியா குழு இன்னும் கிடைக்கவில்லை. விரைவில் பிடிபடுவார்கள்.

    ராணிப்பேட்டை சிப்காட் வாலாஜா நகரங்களில் சுற்றிதிரியும் கால்நடைகள் காவல்துறை நகராட்சி இணைந்து ஒரு வாரத்தில் பிடித்து வேலூர் கோசாலையில் விடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×