search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தரைப்பாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதை படத்தில் காணலாம்.
    X
    தரைப்பாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதை படத்தில் காணலாம்.

    பெண்ணாடம் அருகே காட்டாற்று வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது

    பெண்ணாடம் அருகே பலத்த மழை பெய்து வருதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காட்டாற்று வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இதில் 20 கிராம மக்கள் பாதிப்பு அடைந்தனர்.

    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ளது சவுந்தரசோழபுரம். இங்கு வெள்ளாறு ஓடுகிறது. இங்கு அரியலூர் மாவட்டத்தை இணைக்கு வகையில் சவுந்தரசோழபுரம் - கோட்டைக்காடுகிடையே தரைப்பாலம் ஒன்று உள்ளது. இதன்வழியாக அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த முள்ளுக்குறிச்சி, ஆதனங்குறிச்சி, கோட்டைகாடு, அரியலூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடலூர் மாவட்டத்துக்கு சென்று வந்தனர்.

    அதுபோல் அரியலுர் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் இருசக்கதர வாகனங்களில் வந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரியில் படித்து வருகிறார்கள்.

    இந்த தரைப்பாலம் கடலூர் மற்றும் அரியலுர் மாவட்ட மக்களுக்கு பெரிதும் உதவியாக இருந்து வந்தது.

    பெண்ணாடம், திட்டக்குடி மற்றும் அரியலூர் மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக ஆணைவாரி ஓடை, உப்பு ஓடை போன்றவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைபுரண்டு வெள்ளம் ஓடியது. இதனால் சவுந்தரசோழபுரம், கோட்டைக்காடு இடையேயான தரைப்பாலம் காட்டாற்று வெள்ளத்தில் இன்று காலை அடித்து செல்லப்பட்டது.

    இதையடுத்து அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் கடலூர் மாவட்டத்துக்கு வரமு டியாமல் தவித்தனர். அதுபோல் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளும் இருசக்கர வாகனங்களில் வரமுடிய வில்லை அவர்கள் 20 கிலோமீட்டர் தூரம் சுற்றி கடலூர் மாவட்டத்திற்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.

    கடந்த செப்டம்பர் மாதம் 19-ந் தேதி பெண்ணாடம் பகுதியில் பலத்த மழைபெய்தது. அப்போது ஏற்பட்ட வெள்ளபெருக்கிலும் இந்த தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது குறிப்பிடதக்கதாகும்.

    Next Story
    ×