என் மலர்
செய்திகள்

விபத்து
போரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் போலீஸ்காரர் பலி
போரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் போலீஸ்காரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
பரங்கிமலை போலீசில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் நல்லுசாமி (வயது 32). இவர் நேற்று இரவு அதே பகுதி பட்டுரோடு கரையான் கோவில் தெருவை சேர்ந்த பிகாஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் போரூர் நோக்கி சென்றார்.
ராமாபுரம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை தடுப்பு சுவரில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த போலீஸ்காரர் நல்லூசாமி பரிதாபமாக இறந்தார். பலத்த காயம் அடைந்த பிகாசுக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Next Story






