என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவானிசாகர் அணை
    X
    பவானிசாகர் அணை

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது - தண்ணீர் திறப்பு நிறுத்தம்

    நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது.
    ஈரோடு:

    நீலகிரி மலையில் பெய்து வந்த மழையால் பவானி சாகர் அணைக்கு தண்ணீர் அதிகரித்து வந்தது. இதனால் பவானிசாகர் அணை கடந்த ஆண்டை போல் இந்தாண்டும் நிரம்பியது.

    இதனால் 100 அடியை தொட்டதும் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    கடந்த 3 நாட்களாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

    இதனால் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 1988 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்காலுக்கு மட்டும் 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த மழை கடந்த 2 நாட்களாக குறைந்தது.நேற்று இரவு அந்தியூர் பகுதி வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 18.4 மி.மீ மழையும், தாளவாடியில் 3 மி.மீ. மழையும் குண்டேரி பள்ளம் அணையில் 2 மி.மீ. மழையும் பெய்தது. வேறு எங்கும் மழை இல்லை.

    இந்த நிலையில் நாளை முதல் மீண்டும் வடகிழக்கு பருவமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×