என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    வேதாரண்யம் அருகே லோடு ஆட்டோ மோதி பால் வியாபாரி பலி

    வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லோடு ஆட்டோ மோதிய விபத்தில் பால் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் பிச்சன் கோட்டகம் மூலக்கரை பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 47). பால் வியாபாரி.

    இவர் நேற்று மாலை பால் வியாபாரத்துக்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    இந்த நிலையில் அந்த வழியாக எதிரே வந்த ஒரு லோடு ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் குமார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ் பெக்டர் முனியாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    விபத்தில் பலியான குமாருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    Next Story
    ×