என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    பெருந்துறை அருகே வீட்டில் இருந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே வீட்டில் இருந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெருந்துறை:

    பெருந்துறை அருகே உள்ள குட்டையூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 21).

    இவர் மதியம் 12 மணியளவில் வீட்டில் இருந்த போது திடீரென வீட்டின் விட்டத்தில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வாலிபர் முருகன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×