search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல் பங்கில் பணம் கொள்ளை
    X
    பெட்ரோல் பங்கில் பணம் கொள்ளை

    முன்னாள் அமைச்சர் உறவினரின் பெட்ரோல் பங்கில் ரூ.1 1/2 லட்சம் கொள்ளை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    முன்னாள் அமைச்சர் உறவினரின் பெட்ரோல் பங்கில் ரூ.1 1/2 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரியபாளையம்: 

     அம்பத்தூரைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவருக்கு வெங்கல் அருகே உள்ள பூச்சி அத்திப்பேடு கிராமத்தில் செங்குன்றம்- திருவள்ளூர் சாலையில் பெட்ரோல் பங்க்  உள்ளது. இவர் முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தியின் நெருங்கிய உறவினர். 

    நேற்று நள்ளிரவு பெட்ரோல் பங்கை மூடிவிட்டு ஊழியர்கள் முரளி, முருகன் ஆகியோர் அங்கு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் பெட்ரோல் நிரப்பும் படி கூறினர். 

    திடீரென அவர்கள் அரிவாளை காட்டி மிரட்டி  பீரோவில் இருந்த பணத்தைக் கொடுக்கும்படி தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் பீரோவில் இருந்த ரூ.1 1/2 லட்சத்தை கொள்ளையர்களிடம் கொடுத்தனர்.  

    பின்னர் பணத்துடன் கொள்ளை கும்பல் அங்கி ருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து வெங்கல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  

    போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பெட்ரோல் பங்கில் உள்ள கண்காணிப்பு கேமிரா மற்றும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறார்கள். கொள்ளையர்கள் தப்பி சென்ற மோட்டார் சைக்கிளின் பதிவு எண் தெரியவந்துள்ளது. இதனை வைத்து தீவிர விசாரணை நடக்கிறது. 
    Next Story
    ×