search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் மணல் கடத்திய 6 பேர் ஜெயிலில் அடைப்பு

    வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்திய 6 பேர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி மணல் கடத்தல்காரர்களை கைது செய்து வருகின்றனர்.

    விரிஞ்சிபுரம் போலீசார் நேற்று இரவு மேல்மொணவூர் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது பாலாற்றில் இருந்து மணல் கடத்தி வந்த 4 மாட்டு வண்டிகளை மடக்கி பிடித்தனர்.

    அதனை ஒட்டி வந்த மேல்மொணவூரைச் சேர்ந்த கோபிநாதன் (வயது 28), மோகன் (28), சத்யன் (25), கார்த்தி (38) ஆகியோரை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த நாகராஜன் (42) என்பவரை வாலாஜா போலீசார் கைது செய்தனர்.

    உமராபாத் அடுத்த பழைய மின்னூரில் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த குணசேகரன் (41) என்பவரை போலீசார் கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இவர்கள் 2 பேரையும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
    Next Story
    ×