என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள், பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
    X
    பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள், பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    ஆசிரியர்கள் பற்றாக்குறை: பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள், பெற்றோர் போராட்டம்

    ஜோலார்பேட்டை அருகே ஆசிரியர்கள் நியமிக்க கோரி பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடியில் அரசு நடுநிலைபள்ளி செயல்பட்டு வருகிறது. இங்க எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை 156 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியையாக சகாயமேரியும் மற்றும் 4 ஆசிரியர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மேலும் ஒரு ஆசிரியை பணிக்கு வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அவரை ஏலகிரி மலை பள்ளிக்கு பணிமாறுதலில் சென்றுவிட்டார். இதனால் மாணவர்களுக்கு பாடம் நடத்த போதிய ஆசிரியர்கள் இல்லை என கூறப்படுகிறது.

    இதுகுறித்து கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க பெற்றோர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திடீரென பள்ளி கேட்டை இழுத்து பூட்டு போட்டனர்.

    மேலும் பள்ளியினுள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.

    இதையடுத்து தலைமை ஆசிரியை சகாயமேரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஒருவாரத்தில் அதிகாரிகளிடம் பேசி கூடுதலாக ஆசிரியர்கள் நியமிக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். இதையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    Next Story
    ×