என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    காட்பாடி அருகே தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் வீட்டில் திருட்டு - பெண்ணை அறையில் பூட்டி கைவரிசை

    காட்பாடி விருதம்பட்டில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்களை அறையில் பூட்டி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    வேலூர்:

    காட்பாடி விருதம்பட்டு பால் நகரை சேர்ந்தவர் சாமுவேல் (வயது 53). வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்தி ரியில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கிரேசி மில்டன். வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் கண் பரிசோதனை நிபுணராக உள்ளார். இவர் மகள் சென்னையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இரவு கிரேசி மற்றும் அவரது மகன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்தனர். கிரேசி, அவரது மகன் தூங்கிக்கொண்டு இருந்த அறையை வெளிப்புறமாக பூட்டு போட்டு பூட்டினர்.

    பின்னர் மற்றொரு அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 5 பவுன் நகை ரூ.45 ஆயிரம் ஆகியவற்றை எடுத்தனர். அதனுடன் மோட்டார் சைக்கிள் ஆர்.சி.புக் ஜெராக்ஸ் இருந்தது அதனை எடுத்துக்கொண்டு வீட்டின் வெளியே நிறுத்தி இருந்த பைக்கை ஓட்டிசென்றுவிட்டனர்.

    இன்று காலை கண் விழித்த கிரேசி தான் அறையில் பூட்டப்பட்டிருப்பதை அறிந்தார். அவர் கத்தி கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் சென்று மீட்டனர்.

    இதுபற்றி விருதம்பட்டு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.

    அந்தப் பகுதியில் உள்ள வணிக வளாகம் மற்றும் வீடுகளில் உள்ள கேமராக்கள் மூலம் போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர்.
    Next Story
    ×