search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உப்பு உற்பத்தி
    X
    உப்பு உற்பத்தி

    வேதாரண்யத்தில் கனமழையால் உப்பு உற்பத்தி நிறுத்தம்

    வேதாரண்யத்தில் கடந்த 3 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்ததால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக 2-வது இடமாக உப்பு உற்பத்தி வேதாரண்யத்தில் நடைபெறுகிறது.

    கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் உப்பள பகுதிகள் பாதிக்கப்பட்டு, கடல் சேறு 1 அடிக்கு மேல் புகுந்து விட்டது. இந்த ஆண்டு உற்பத்தி 40 சதவீத உப்பள பகுதியில் மட்டும் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள இடங்கள் சீரமைக்கப்படாமல் உள்ளது.

    கடந்த மாதம் தொடர்ந்து வீசிய ஆடி காற்றால் உப்பு உற்பத்தி செய்யப்பட்ட பாத்திகளில் கடல் நீர் உள்ளே புகுந்து பாதிக்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்ததால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    இதனால் சுமார் 10 ஆயிரம் ஆண்-பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உப்பள பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் உப்பு உற்பத்தி அடியோடி நிறுத்தப்பட்டது. சாலை ஓரங்களில் சேமித்து வைத்துள்ள உப்புகளை ஏற்றும் பணியும் பாக்கெட் போடும் பணியும் நடைபெறுகிறது.

    நேற்று முன்தினம் ஒரே நாளில் வேதாரண்யத்தில் 64.2 மி.மீட்டரும், தலைஞாயிறில் 52.6 மழை பதிவாகியுள்ளது. வேதாரண்யம் சுற்று வட்டார விவசாயிகள் இந்த மழையினால் மகிழ்ச்சியடைந்து விவசாய பணிகளை துவங்கி உள்ளனர்.

    புதுப்பள்ளி பகுதியில் 5-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் மழை காற்றால் சாய்ந்துள்ளது. உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை இல்லாவிட்டால் உப்பு உற்பத்தி தொடங்க 15 நாட்கள் மேலாகும் என தெரிவித்துள்ளனர்.

    இந்த ஆண்டு குறைவான உப்பு உற்பத்தி செய்யப்பட்டதால் உப்பு இருப்பும் குறைவாக உள்ளது. இதனால் உப்பு விலை ஏற வாய்ப்புள்ளது என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×