என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
முக ஸ்டாலின்
நான் வெளிநாடு செல்வதை மர்மம் என்று கூறுவதா? - எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் பதில்
By
மாலை மலர்29 Aug 2019 3:05 AM GMT (Updated: 29 Aug 2019 3:05 AM GMT)

தன்னுடைய வெளிநாட்டு பயணம் வெளிப்படையானது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தொழிலதிபர்களைச் சந்தித்து தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்க்கவே வெளிநாடு செல்கிறேன் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2015 செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10-தேதி ஆகிய இரு நாட்கள் நடத்தப்பட்டது. 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த முதலீடுகள் இதுவரை தமிழகத்தை எட்டிப் பார்க்கவே இல்லை.
பிறகு, எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சரான பிறகு இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2019 ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு திரட்டி விட்டதாக, ஜெயலலிதாவை விட ஒரு படி மேலே போய், ஆடம்பரமாக விளம்பரம் செய்யப்பட்டது. இந்த இரு மாநாடுகளிலும் போடப்பட்ட 402 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் வரப் போவதாகச் சொன்ன 5.42 லட்சம் கோடி முதலீடுகள் தமிழகத்திற்கு வந்ததா? இல்லவே இல்லை. முதலீடு அறிவிப்புகள் கானல் நீராகிவிட்டது. வெற்று விளம்பரச் செலவுதான் மிச்சம்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட தொழிலதிபர்களிடம் இந்த முதலீடுகளைப் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டதா? அதுவும் இல்லை. இது குறித்து ஒரு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யக்கோரி மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் தொடர்ந்து நான் வலியுறுத்தியும், முதலமைச்சருக்கு வெள்ளை அறிக்கை வெளியிடும் துணிச்சல் வரவில்லை.
முதலீடுகள் பெறுவதற்குச் செல்லும் என் வெளிநாட்டுப் பயணத்தை கொச்சைப்படுத்துவதா? என்று கேட்டிருக்கிறார்.
மு.க.ஸ்டாலின் மட்டும் ஏன் அடிக்கடி வெளிநாடு செல்கிறார் என்று இன்னொரு கேள்வி எழுப்பியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. துணை முதல்-அமைச்சராக இருந்த நேரத்தில் நான் அரசுமுறை பயணமாக வெளிநாடு சென்றிருக்கிறேன். ஆனால், அப்போது நான் ஒக்கேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டத்திற்கும், மெட்ரோ ரெயில் திட்டத்திற்கும் நிதியுதவி பெற்று வந்திருக்கிறேன். தி.மு.க. ஆட்சியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடோ, வெளிநாட்டுப் பயணங்களோ, வீண் விளம்பரங்களோ, இல்லாமலேயே முதலீடுகளை பெருமளவில் திரட்ட முடிந்தது.
என்னுடைய தனிப்பட்ட பயணங்கள் எல்லாம் வெளிப்படையானவை. குடும்பத்தினருடன் செல்லும் சொந்தப் பயணங்களுடன், அரசுமுறை பயணமாகப் போவதை எடப்பாடி பழனிசாமி ஒப்பிடுவது ஒரு முதல்-அமைச்சருக்கு அழகல்ல; ஒப்பீடும் முறையானது இல்லை. அவர்கள் எத்தனை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினாலும், எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டாலும் முதலீடுகள் கிடைக்காமல் தத்தளித்து, தனிமரமாய் நிற்கிறது தமிழகம்.
நான் வெளிப்படையாக வெளிநாடு செல்வதை மர்மம் என்று கூறும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய வெளிநாட்டுப் பயணத்தில் ஒளிந்து கிடக்கின்ற மர்மங்களை உண்மையான காரணங்களை தமிழக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்; ஏற்கனவே தமிழக மக்களிடையே பரவியிருக்கும் சந்தேகங்களுக்கு நேர்மையாக விளக்கம் அளிக்க வேண்டும். அதைவிடுத்து, திசைதிருப்பும் முயற்சியினால் தினை அளவு நன்மையும் விளையாது என்ற அரிச்சுவடியைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story
×