என் மலர்

  செய்திகள்

  மணலுடன் பறிமுதல் செய்யப்பட்ட லாரி (கோப்பு படம்)
  X
  மணலுடன் பறிமுதல் செய்யப்பட்ட லாரி (கோப்பு படம்)

  ஆப்பக்கூடல் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல் - டிரைவர் குதித்து ஓட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்பக்கூடல் அருகே மணல் கடத்திய லாரியை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
  ஆப்பக்கூடல்:

  ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே மல்லியூர் பவானி ஆற்று படுகையில் மணல் அள்ளுவதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  இதன் பேரில் அங்கு சப்-இன்ஸ்பெக்டர் பூபதி தலைமையில் போலீசார் விரைந்தனர்.

  அந்த பகுதியில் இருந்து வந்த ஒரு லாரியை மடக்கி சோதனை செய்தனர். லாரி மீது படுதாவால் மூடப்பட்டு உள்ளே ஆற்று மணலை கடத்தியது தெரிய வந்தது.

  லாரியை ஓட்டி வந்த டிரைவர் கீழே குதித்து ஓட்டம் பிடித்தார். பிறகு போலீசார் மணலுடன் வந்த லாரியை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

  மேலும் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மணல் கடத்திய புள்ளி யார்? என்பது குறித்து அதிரடி விசாரணையில் இறங்கி உள்ளனர்.
  Next Story
  ×