search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    அண்ணாநகரில் இளம்பெண் மர்ம மரணம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அண்ணாநகரில் குளியல் அறையில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அண்ணாநகர்:

    அண்ணாநகரில் வசித்து வருபவர் கிருஷ்ண பகதூர். இவரது மனைவி பிங்கி (30). மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இவர் பச்சைகுத்துதல் மற்றும் சேலை விற்பனை செய்து வந்தார்.

    இந்த நிலையில் குளியல் அறையில் பிங்கி வழுக்கி விழுந்து இறந்து விட்டதாக அவரது கணவர் கிருஷ்ணன் பகதூர் திருமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அதே பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது பிங்கியின் வீட்டுக்குள் மர்ம நபர்கள் 2 பேர் வந்து செல்வது பதிவாகி இருந்தது. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பிங்கியின் உடலிலும் காயங்கள் உள்ளன.

    எனவே பிங்கி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக அவரது கணவர் கிருஷ்ண பகதூர் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலையுண்ட பிங்கி ஏற்கனவே முதல் கணவரை பிரிந்து கிருஷ்ணபகதூரை 2-வது திருமணம் செய்து வாழ்ந்து வந்து இருக்கிறார். அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. பிங்கியின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×