என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

புழலில் காதல் தோல்வியால் பெண் தற்கொலை

செங்குன்றம்:
புழல் சேர்ந்தவர் சசிகலா (28). பாடியில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக அவர் விரக்தியுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
நேற்று இரவு படுக்கைக்கு சென்றார். பெற்றோர் ஒரு அறையிலும், மகள் ஒரு அறையிலும் படுத்து தூங்கினர். இன்று காலையில் தந்தை எழுந்து மகளின் அறைக்கு சென்றுள்ளார்.
அங்கு சசிகலா தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு கதறி அழுதார். பின்னர் இதுபற்றி புழல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். சசிகலா காதல் தோல்வியால் தற்கொலை செய்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. வேலைபார்க்கும் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றும் வாலிபரும் சசிகலாவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த வாரம் காதலனுடன் ஏற்பட்ட தகராறில் மன முடைந்து இருந்ததாகவும் அதனால் இந்த விபரீத முடிவை எடுத்து இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. திருமணம் செய்வதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதா? அல்லது எதற்காக மோதல் ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
ஊத்துக்கோட்டை சர்ச் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி ரம்யா (வயது 20). இவர்களுக்கு கடந்த வருடம் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கருத்து வேறுபாட்டால் ரம்யா கணவரை பிரிந்து அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.
வீட்டில் தனியாக இருந்த போது ரம்யா திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.