என் மலர்

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ராயபுரம் பகுதியில் கத்தியுடன் சுற்றிய 2 வாலிபர்கள் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ராயபுரம் பகுதியில் கத்தியுடன் சுற்றிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்த வருகின்றனர்.

    ராயபுரம்:

    ராயபுரம் ஷேக் மேஸ்திரி தெரு பகுதியில் நேற்று இரவு தனிப்படை போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக மோட்டார் சைக்கிளில் நின்றுகொண்டிருந்த 2 வாலிபர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

    அவர்களிடம் இரண்டு கத்திகள் இருந்தன. எனவே போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் காசிமேடு பகுதியை சேர்ந்த லோகேஷ் (23), விமல் குமார் (23)என்பதும் கடந்த ஆண்டு காசிமேடை சேர்ந்த பஞ்சாயத்து சபை தலைவர் சிவகுமார் என்பவர் கொலை வழக்கில் லோகேஷ் முக்கிய குற்றவாளி என்பது தெரியவந்தது.

    அவர்களிடமிருந்து கத்தி மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடக்கிறது.

    Next Story
    ×