என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

பழனியில் காதல் ஜோடிக்கு மிரட்டல் விடுத்த 3 பேர் கைது

பழனி:
பழனி பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவனும், தாராபுரம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். நேற்று காலை இந்த காதல்ஜோடி பழனி இடும்பன் மலைக்கோவிலுக்கு வந்துள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தனியார் நிறுவன காவலர் பூவழகன் (வயது 49), காதல்ஜோடியை பிடித்து விசாரித்துள்ளார். பின்னர் அந்த மாணவனை மிரட்டி, விரட்டியுள்ளனர். அந்த சிறுமியை தனது நண்பர்கள் 2 பேருடன் பூவழகன் அனுப்பி வைத்ததாக தெரிகிறது.
இதனால் பயந்துபோன அந்த மாணவன், பழனி அடிவாரம் போலீஸ் நிலையத்துக்கு சென்று நடந்த விவரத்தை தெரிவித்தார். இதையடுத்து அடிவாரம் போலீசார், காவலர் பூவழகன், அவருடைய நண்பர்கள் சோலைராஜ் (23), மனோஜ் (26) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த மாணவியை பஸ் ஏற்றி ஊருக்கு அனுப்பி வைத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் அந்த சிறுமியின் பெற்றோரிடம் தொடர்பு கொண்டு பேசியபோது, மாணவி வீடு வந்து சேர்ந்ததாக அவர்கள் தெரிவித்தனர். எனினும் தங்களுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக அந்த மாணவன் கொடுத்த புகாரின்பேரில் அடிவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூவழகனை கைது செய்தனர். மேலும் அவரின் நண்பர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.