search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
    X
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

    அத்திவரதரை தரிசிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 12-ந்தேதி காஞ்சிபுரம் வருகை

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக வரும் 12-ந்தேதி காஞ்சிபுரம் வருகிறார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து வெளியே எடுத்து தரிசிக்கப்படும் அத்திவரதர் சிலை தரிசனம் கடந்த 1-ம் தேதி தொடங்கியது.

    கோவில் வசந்த மண்டபத்தில் சயன நிலையில் அருள்பாலிக்கும் அத்திவரதரை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கானவர்கள் திரள்கிறார்கள். இதுவரை சுமார் 10 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

    அத்தி வரதர்

    இந்நிலையில், அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக வரும் 12-ந்தேதி வெள்ளிக்கிழமை அன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காஞ்சிபுரம் வருகிறார்.

    இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடையும் ஜனாதிபதி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் செல்கிறார். அன்று மாலை 3 மணியில் இருந்து 4 மணிக்குள் அத்திவரதரை தரிசிக்கிறார்.

    மாலை 5 மணியளவில் சென்னை திரும்பும் அவர் அன்றிரவு கவர்னர் மாளிகையில் தங்கிவிட்டு மறுநாள் காலை ஆந்திர மாநிலத்தில் உள்ள ரேணிகுண்டா புறப்பட்டு செல்கிறார்.
    Next Story
    ×