என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    பல்லாவரத்தில் டிப்பர் லாரி மோதி என்ஜினீயர் பலி

    பல்லாவரத்தில் டிப்பர் லாரி மோதி என்ஜினீயர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேளச்சேரி:

    ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்தவர் சுஜித் சுகன் (36). இவர் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு வேலை முடித்து விட்டு வீட்டுக்குத் திரும்பி கொண்டிருந்தார். மேடவாக்கம் மெயின் சாலை வழியாக ஈச்சங்காடு சிக்னல் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் ஒருவர் குறுக் கிட்டதால் திடீர் பிரேக் போட்டார்.

    இதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் மவுண்ட் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×