என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிழக்கு கடற்கரை சாலையில் கார் கவிழ்ந்து கல்லூரி மாணவி பலி
Byமாலை மலர்4 July 2019 8:01 AM GMT (Updated: 4 July 2019 8:01 AM GMT)
மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
மாமல்லபுரம்:
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரிதா (வயது19). ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் நண்பர் கார்த்திக் என்பவரின் காரில் 5 பேருடன் மாமல்லபுரத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் மாமல்லபுரத்தில் இருந்து சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டு இருந்தனர். காரை கார்த்திக் ஓட்டினார்.
மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் வந்த போது, சாலையின் குறுக்கே திடீரென மாடுகள் புகுந்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
பலத்த காயம் அடைந்த பிரிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் காரில் இருந்த கார்த்திக், அஸ்வின், பிராங்லின் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
மாமல்லபுரம் போலீசார் அவர்களை மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பிரிதாவுடன் வந்த ஆண் நண்பர்கள் அனைவரும் சென்னையில் உள்ள வெவ்வேறு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story
×