என் மலர்
செய்திகள்

அமைச்சர் செங்கோட்டையன்
மடிக்கணினி வழங்குவதில் படிக்கும் மாணவ-மாணவியருக்கு முன்னுரிமை: அமைச்சர் செங்கோட்டையன்
மடிக்கணினி வழங்குவதில் தற்போது படிக்கும் மாணவ-மாணவியருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
சென்னை:

தற்போதைய பாடத் திட்டத்தின்படி கணினிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. எனவே பிளஸ்-1, பிளஸ்-2 படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி தேவைப்படுகிறது. எனவே மடிக்கணினி வழங்குவதில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஏற்கனவே பிளஸ்-2 முடித்தவர்களுக்கு பின்னர் மடிக்கணினி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சட்டசபையில் இன்று பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது மடிக்கணினி கேட்டு மாணவ-மாணவிகள் பல்வேறு பள்ளிகளில் போராட்டம் நடத்துவது குறித்து உறுப்பினர் கேட்டார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

Next Story