என் மலர்
செய்திகள்

கைது
பல்லாவரத்தில் பதுங்கி இருந்த ரவுடிகள் 3 பேர் கைது
பல்லாவரத்தில் பதுங்கி இருந்த ரவுடிகள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
புளியந்தோப்பு, கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவன் அம்பேத்கர். பிரபல ரவுடி. இவன் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. அவனை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் ரவுடி அம்பேத்கர் மற்றும் கூட்டாளிகள் பல்லாவரத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் முரளி, போலீஸ்காரர்கள் குமரேசன், தியாகராஜன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் பல்லாவரத்தில் பதுங்கி இருந்த அம்பேத்கர், அவரது கூட்டாளிகள் ஸ்டிபன், குகன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான ரவுடிகள் 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story