என் மலர்

  செய்திகள்

  கோபியில் பூப்பறிக்க வந்த பெண் மின்சாரம் தாக்கி பலி
  X

  கோபியில் பூப்பறிக்க வந்த பெண் மின்சாரம் தாக்கி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஈரோடு மாவட்டம் கோபி அருகே இன்று காலை காலை பூப்பறிக்க வந்த பெண் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
  கோபி:

  கோபி அருகே உள்ள அம்மன் கோவில் பதியை சேர்ந்தவர் பாக்யலட்சுமி (வயது 60). இவருக்கு 3 மகன்களும் 1 மகளும் உள்ளனர்.

  கோபி முத்துவேலப்பன் வீதியில் உள்ள மகன் தீனதயாளன் வீட்டில் அவர் வசித்து வந்தார்.

  பாக்யலட்சுமி தனது வீட்டின்முன் வளர்த்து வரும் பூச்செடிகளில் தினமும் பூ பறிப்பார். அதேபோல் இன்று காலையும் பாக்யலட்சுமி பூ பறிக்க வீட்டின் வெளியே சென்றார். அப்போது வெளியே துணி காயபோட்டிருந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்திருந்தது. இதை கவனிக்காத அவர் அந்த கம்பியை தொட்ட போது அவரை மின்சாரம் தாக்கியது.

  இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.

  இதுகுறித்து கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பாக்யலட்சுமி உடலை பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
  Next Story
  ×