என் மலர்

  செய்திகள்

  திட்டமிட்டப்படி 3ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்
  X

  திட்டமிட்டப்படி 3ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 3-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் விடுமுறையை தள்ளி வைக்க வாய்ப்பு இல்லை என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

  சென்னை:

  தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு ஏப்ரல் கடைசி வாரம் கோடை விடுமுறை விடுவது வழக்கம்.

  இந்த ஆண்டு பாராளுமன்றம், சட்டசபை இடைத்தேர்தல் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை நடந்தது. இதனால் பள்ளிகளுக்கு முன்னதாகவே அரசு பொது தேர்வுகளும் ஆண்டு இறுதி தேர்வுகளும் நடத்தப்பட்டன.

  முன்னதாகவே தேர்வுகள் முடிவடைந்ததால் பல தனியார் பள்ளிகளில் ஏப்ரல் 16-ந் தேதியே விடுமுறை விடப்பட்டது. அதைத் தொடர்ந்து அரசு பள்ளிகளுக்கும் வழக்கத்தைவிட 2 வாரங்களுக்கு முன்னதாகவே விடுமுறை விடப்பட்டது.

  கோடை விடுமுறை முடிந்து வருகிற ஜூன் 3-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில், வெயில் கடுமையாக இருப்பதால் பள்ளிகளுக்கு மேலும் 2 வாரம் விடுமுறையை நீடிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.


  எனவே, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீடிக்கும். 3-ந் தேதி திறக்க வாய்ப்பு இல்லை. அரசு புதிய தேதியை முடிவு செய்யும் என்று கூறப்பட்டது.

  இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ‘ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 3-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும். விடுமுறையை தள்ளி வைக்க வாய்ப்பு இல்லை’ என்று அறிவித்துள்ளார்.

  எனவே, திட்டமிட்டப்படி வருகிற 3-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்புகிறார்கள்.
  Next Story
  ×