என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேல்மருவத்தூரில் வங்கி மேலாளர் வீட்டில் நகை - பணம் கொள்ளை
    X

    மேல்மருவத்தூரில் வங்கி மேலாளர் வீட்டில் நகை - பணம் கொள்ளை

    மேல்மருவத்தூரில் வங்கி மேலாளர் வீட்டில் நகை  மற்றும்  பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    மேல்மருவத்தூரை அடுத்த கேசவராயன்பேட்டை, லட்சுமி நகரில் வசித்து வருபவர் பாலமுருகன். மேல்மருவத்தூரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி மற்றும் மகன் கடந்த மாதம் கோவில்பட்டியில் உள்ள சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். அவர்களை அழைத்து வருவதற்காக பாலமுருகன் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு சென்றார்.

    இன்று காலை பாலமுருகன் குடும்பத்துடன் திரும்பி வந்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைத்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகை, ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருந்தது.

    பாலமுருகன் வீட்டில் இல்லாததை நோட்டமிட்ட மர்ம கும்பல் நகை- பணத்தை சுருட்டி சென்றுள்ளனர். இதில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.

    இதுகுறித்து பாலமுருகன் மேல்மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×