search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைரோட்டில் தலைமை ஆசிரியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
    X

    கொடைரோட்டில் தலைமை ஆசிரியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

    கொடைரோடு அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    கொடைரோடு:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்தவர் பீட்டர் (வயது 54). இவர் தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜூலியட் ஜெபமணி. அம்மையநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    விடுமுறை என்பதால் கணவன்-மனைவி 2 பேரும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்று விட்டனர். இன்று காலை அவர்கள் ஊருக்கு திரும்பினர்.

    அப்போது தங்கள் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. உள்ளே இருந்த 2½ பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    இது குறித்து அம்மையநாயக்கனூர் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. நிலக்கோட்டை டி.எஸ்.பி. பாலக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் லாவண்யா, சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. திண்டுக்கல்லில் இருந்து மோப்பநாய் ரீட்டா வரவழைக்கப்பட்டு வீட்டில் மோப்பம் பிடிக்க செய்தனர். அது வீட்டை சுற்றி விட்டு வெளியே ஒரு கி.மீ தூரம் வரை ஓடி நின்றது.

    வீடு பூட்டப்பட்டிருந்ததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் தங்கள் கைவரிசையை காட்டிச் சென்றது தெரிய வந்துள்ளது. கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    Next Story
    ×