என் மலர்

  செய்திகள்

  கொள்ளை நடந்த வீட்டை படத்தில் காணலாம்.
  X
  கொள்ளை நடந்த வீட்டை படத்தில் காணலாம்.

  மயிலம் அருகே வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகைகள் கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே வீடு புகுந்து பெண்ணை தாக்கி 5½ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  மயிலம்:

  விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள தல்லாகுளத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 65). இவரது மகள் வாசுகி (36). இவரது கணவர் செல்வம். இவர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

  வாசுகி தனது கணவருடன் சென்னை மதுரவாயலில் வசித்து வருகிறார். நேற்று காலை வாசுகி தல்லாகுளத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்திருந்தார்.

  நேற்று இரவு ஜெயலட்சுமி, வாசுகி ஆகியோர் சாப்பிட்டனர். பின்னர் அவர்கள் காற்றுக்காக கதவை திறந்து வைத்தே வராண்டாவில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் 2 மர்ம மனிதர்கள் ஜெயலட்சுமி வீட்டுக்குள் புகுந்தனர்.

  பின்பு அவர்கள் வாசுகியின் கழுத்தில் கிடந்த தாலி செயினை பறித்தனர். அப்போது திடுக்கிட்டு எழுந்த அவர் வீட்டுக்குள் கொள்ளையர்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட முயன்றார்.

  அப்போது ஆத்திரம் அடைந்த கொள்ளையன் ஒருவன் வாசுகியின் காலை பிடித்து இழுத்து தாக்கினான். இதில் நிலைகுலைந்த வாசுகி கீழே விழுந்தார். உடனே கொள்ளையர்கள் 2 பேரும் அவரது கழுத்தில் கிடந்த 5½ பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

  இது குறித்து மயிலம் போலீசில் வாசுகி புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

  பெண்ணை தாக்கி நகை கொள்ளைபோன வீட்டை பார்வையிட்டனர். பின்பு வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிவிட்ட கொள்ளையர்களை வலை வீசி தேடிவருகிறார்கள்.

  நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  Next Story
  ×